Monday, October 26, 2009

அழைப்பு மணி


வீட்டின் அழைப்பு மணி

வீதியில் சிறுவருக்கோ

விளையாட்டுச் செல்ல மணி.


காதலரைப் பிரிந்தவர்க்கோ

கட்டாயம் அழைப்புமணி

காதல் கவிதை மணி.


நேர்முகத் தேர்வுக்கு

காத்திருக்கும் இளைஞனுக்கோ

பணி ஆனை அழைப்பு மணி.


மருத்துவரின் பார்வைக்கு

காத்திருக்கும் நோயாளிக்கோ

மருந்தாகும் அழைப்புமணி

2 comments:

Thenammai Lakshmanan said...

//மருந்தாகும் அழைப்புமணி//


நல்ல வார்த்தைத் தேர்வு பாலா

பரிதியன்பன் said...

நன்றி
தேனம்மை இன்னும் சிறப்பாக எழுத உங்கள பாராட்டு ஊக்கமருந்து