Monday, October 26, 2009

உழை


மண்நனைத்து மணம்பரப்பும் மழை

மக்களையேச் சேர்ந்திருக்க விழை

மண்மைந்தர் உரிமைகளை

மறத்தோடுப் போரிட்டு

உண்மையாய் அடைவதற்கு உழை

உடை


அன்னம்போல் வேண்டுகிறார் நடை

அடக்கமாக வேண்டுகிறார் உடை

எண்ணம்போல் இருந்திடவே

எதிர்க்கின்ற சதிகார

ஆண்வர்க்க ஆளுமையை உடை

அழைப்பு மணி


வீட்டின் அழைப்பு மணி

வீதியில் சிறுவருக்கோ

விளையாட்டுச் செல்ல மணி.


காதலரைப் பிரிந்தவர்க்கோ

கட்டாயம் அழைப்புமணி

காதல் கவிதை மணி.


நேர்முகத் தேர்வுக்கு

காத்திருக்கும் இளைஞனுக்கோ

பணி ஆனை அழைப்பு மணி.


மருத்துவரின் பார்வைக்கு

காத்திருக்கும் நோயாளிக்கோ

மருந்தாகும் அழைப்புமணி

Thursday, October 8, 2009

பள்ளி


இன்று

யாழினி

பள்ளிக்குச் சென்றாள்.

நாளைப் போவோம்

நாளைப் போவோம்

என

நாங்கள் பேசிக்கொள்வோம்.

அந்த

நாளும் வந்தது.

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல்

சிரித்து பேசிக்கொண்டே

வகுப்பறையில் நுழைந்தாள்

மனத்தில் நெகிழ்ச்சி.

குருவி


காகத்திடம் அடிபட்டு

வந்தது ஒரு சிறு குருவி.

அதற்கு இணைத் தேடி

சேர்த்தோம்.

கூடவே

இன்னும் இரண்டு குருவிகள்

சேர்ந்து கொண்டன.

ஒரு நாள் காலை

அனைத்து குருவிகளின்

கால்களிலும் குருதி.

விளங்கவில்லை காரணம்.

குழந்தை மிகவும் வருந்தினாள்.

இரண்டு நாள் கழித்து

ஒரு குருவி

இறந்து போனது.

மனது வலித்தது.

குழந்தை யாழினி

சொல்லிக்கொண்டே இருந்தாள்.

கூட்டுக்குள் அடைப்பதை

விரும்பாத எனக்கு

குற்ற உணர்வு.