Friday, September 4, 2009

அழுகை


ஒருத்தன் செத்தா நாடழுது

வருத்தப் பட்டு வாய் பிளக்குது

கருத்துச் சொல்லி கவலைப் படுது

திருந்துவாயா தமிழா?-இனிமேல்

வருந்துவாயா தமிழா?


விபத்துல செத்தாக் கூட

அபத்தமாக பழியைப் போட்டு

இந்தியாவே அழுது புலம்புது

சிந்திக்க மறந்தாயே தமிழா?-இப்படி

எந்திரமாய் ஆனாயே தமிழா


தமிழ்நாட்டுத் தலைவரெல்லாம்

தமிழ்மக்கள் கொலை மறந்து

தம்கட்சி கொடி இறக்கி அழுதார்

தாங்கியே பார்த்தாயே தமிழா-ஏன்

ஓங்கி நீ எதிர்க்கவில்லை தமிழா?


எந்தயினம் செத்தாலும்

இந்தியனாய் நீயழுவாய்

உந்தன் இனம் செத்தபோது -ஒப்புக்கும்

ஒருநாய் கூட அழவில்லை தமிழா

உணராமல் போனாயே தமிழா


கொத்துக் கொத்தாச் செத்தாலும்

கொலை கொலையாய் சாஞ்சாலும்

ஒத்துக்க மாட்டானே உயிராய்-உன்னை

எத்திடுவான் இந்தியன் மயிராய்-நீயும்

எப்போது புரிந்திடுவாய் தமிழா?


ஓனத்துக்கு விடுப்பளிப்பான்

ஓர்தேசக் கதையளப்பான்

ஆனமட்டும் நமக்கெதிராய்

ஆட்சி செய்யும் தலைவர்களை

அடையாளம் கண்டிடுவாய் தமிழா?


நாடு போற போக்குள

நம்ம போக்கு நல்லா இல்ல

வீடு சொத்து போதுமே தமிழா

ஆடு மாடா இல்லாம

ஆறு அறிவை பயன்படுத்து தமிழா




Tuesday, September 1, 2009

பாரதம்


ஏ பாரதமே

உன்னைச் சுற்றிய

சிறிய நாடுகளை

மேலாதிக்கம் செய்யவே

ஓடிச் சென்று உதவிடுவாய்.

அறிந்த அவைகளும்

அச்ச உணர்வோடு

பெற்றுக்கொண்டு எட்டி நிற்கும்.

இப்படித்தான்

இலங்கைக்கும்

அழையா விருந்தாளியாய்

அள்ளிக்கொடுத்தாய் ஆயுதங்களை.


அமெரிக்காவும் சீனாவும்

அமைத்திடும் படைத்தளம்

என்ற

அச்சமே எப்போதும்.


உன்

அச்சம் வீண் போகவில்லை

சீனாவின்

வணிக கடற்தளம்

படைத்தளமாவது

வெகுதொலைவிலில்லை


ஈழத் தமிழர்களை

ஈவிரக்கமில்லாமல் கொண்றவர்கள்

நீ

பகையெனக் கருதும்

பாகிஸ்தானோடும்

கை கோர்த்துக் கொண்டு

உன்

பாதுகாப்புக்கே வேட்டு வைக்க

தயாராகிறார்கள்.


ஈழப் படுகொலைக்கு

இந்தியாவே

என்றாவது ஒருநாள்

வரலாற்றில்

மன்னிப்புக் கோருவாய்

தமிழீழம்

தனிக் கொடி படையோடு

அதை சாதிக்கும்.

வல்லரசு கனவு

பகல் கனவு.