Wednesday, August 12, 2009

யாழினி


என்
துயரத்தையும்
எளிதில் துரத்தும்
வல்லமை படைத்த மழலை.
வாய் திறந்து வரும்
அப்பா என்ற
அந்த
ஒற்றைச் சொல்
போதும்
எல்லா அழுத்தமும்
விட்டு விலகி
மனம்
மல்லிகைப் பூவாய்
மாறிவிடும்

பாரதம்


அறுபது ஆண்டு கடந்தும்

ஆனந்த சுதந்திரத்தை

அமர்க்களமாக கொண்டாடும்

பாரத பெருந்தாயே

அண்டை நாட்டில்

அனாதையாகிப் போகும்

ஒரு தேசிய இனத்தின்

அழிவுக்கு துணைபோனது

மனிதாபிமானமா?


கண்டம் கடந்து

கடல் கடந்து

எண்ணம் சிறக்க

இனபம் துன்பம்

எல்லாம் பகிர்ந்து

எதையும் எதிர்பார்க்காமல்

எல்லாவற்றிலும் துணையாய்

உன் நட்புக் கரம்

என்னை நடத்திச் செல்கிறது.

காதலை விடவும்

கண்ணியம் நம் நட்பில்

உணர்ந்து சிலிர்க்கிறேன்.

மொழிக்கூட தடையில்லை

முகம் பேசும்

ஆயிரம் .


தோழர்


அடம்பிடித்தேனும்

தேசியக் கொடியை

சட்டையில் குத்தி

ஊரெலாம் வலம் வந்த

என்

சக தோழனே

இப்போது

ஏன்

உன் கையில்

பச்சை அட்டைக்காக

பிச்சை பாத்திரம்

விடுதலை
விடுதலை நாள் என்ன
விடுமுறை நாளா?
எடு தலை என
பரங்கியரை எதிர்த்து
உயிர் நீத்த தியாகிகளின்
வீர வணக்க நாள்

Thursday, August 6, 2009

சுதந்திரம்


அடிமைத்தளை உடைக்க

ஆர்ப்பரித்து எழுந்த வீரம்

உரிமை அடைவதற்கே

ஊரெலாம் அலைக்கழிப்பு

சுதந்திரம் சுமையா?

சுயமான சிந்தனைக்கு தடையா?

இதமான இளந்தென்றல் காற்று

ஈகியர் எமக்களித்த

தாய்ப்பால் போற்று