Monday, December 14, 2009

சமபந்தி

பெரிய தேசமாய்
பேரெடுக்கவே
அட்டகாசம்

வளர்ச்சிக்குப் பதில்
வீக்கமே
பெருமைக் கொள்ளப்படுகிறது

கல்வி
சுகாதாரம்
வியாபாரம்.

ஆனாலும்
ஒரே நாடாய் இருக்க
அழுத்தங்கள்

மண்ணின் மைந்தருக்கு
மறுக்கப்படும்
உரிமைகள்

விழிப்புற்றுத்
தன்னுரிமைக் கோரினால்
தாங்காத சினம்

தெலுங்கானா உதயம்
தேசத்துக்கும் பெருமை
தெலுங்கருக்கும் நன்மை

தேசிய இனங்களின்
தன்னாட்சியே
மாசிலாத மக்களாட்சி

வீட்டுக் குழந்தைகள்
பட்டினியால் சாக
வீதியில் ஏனடா சமபந்தி?

Wednesday, December 2, 2009

முண்டம்

அருணாச்சலத்தில்
அண்டை சீனாவின்
அத்துமீறல்.

வங்கதேச எல்லையில்
வழியற்ற மக்களின்
ஊடுறுவல்.

வடகிழக் கெங்கிலும்
வந்தேரிகளின்
அட்டகாசம்

பாகிஸ்தான் எல்லையில்
நிரந்தரமாய்
போர் மேகம்

வடக்கெல்லை முழுவதும்
வருத்தும் குளிரில்
அணிவகுப்பு.

கடற்பகுதி முழுவதும்
கட்டுப் பாடற்ற
சூரையாடல்.

ஆன்லைனில்
அதிபர் ஒபாமாவுடன்
அந்தரங்க உரையாடல்

முண்டங்களுக்கு
முழுநேரப் பணி
அரசியல்.

Tuesday, December 1, 2009

நிர்மூலம்

முன்பு
செப்டம்பர் 11 பாரதி
டிசம்பர் 6 அம்பேத்கர்
ஆனால்
இப்போதோ
நம் நினைவுகளை நிர்மூலமாக்கி
இரட்டைக் கோபுரமும்
பாபர் மசூதியும்