Wednesday, April 8, 2009

பக்தி

முன்பைவிடவும்
இப்போது
பக்தி முற்றியிருப்பதாய்
அனைவருமே அங்கலாய்க்கிறார்கள்.

கோவில்கள் பெருகிவிட்டன
கூட்டம் நிரம்பி வழிகிறது
புதுப்புது வழிபாடுகள்
புற்றீசலாய் படையெடுக்கின்றன

ஒரு நாளும்
மனிதன்
தன்
சுயத்தோடு செயல்படுவதில்லை.

வாஸ்த்து
எண்கணிதம்
சோதிடம் என
அனைத்தும்
அவன் மூளையை
மழுங்கடித்து மண்ணாக்க்குகின்றன.

புண்ணாக்கு போலவே
அவன்
பொழுதெலாம் கிடக்கின்றான்

தன்னால் முடியும்
என்பதையே
அவனால்
நம்பமுடியவில்லை.

எல்லாம் அவன் செயல்
என்றே
தன் சுயத்தை இழக்கிறான்.

முன் பிறவி
வினையென்றே
தன் வினையைத்
தள்ளிப்போடுகின்றான்.

ஏழைகளுக்கு இரங்காமல்
ஏழு ஜென்மத்துக்கும்
ஏழுமலையானுக்கும்
சொத்து சேர்க்கின்றான்.

கோவில்கள் கட்டி
கூட்டம் சேர்ந்ததும்
நல்ல விலைக்கு விற்று
நகர்ந்துச் செல்கிறான்

அடுத்த ஊரில்
அதைவிடப் பெரிய
கோவிலுக்கு அடிக்கல் நாட்ட.

மனிதன் மீது
அன்பு செலுத்தாமல்்
மதங்களின் மேல்
வெறிகொண்டு அலைகிறான்.

உயிரிரக்கம் ஒன்றே
உலகில் தேவை என்பதை
உணராத பக்தியால்
முக்தியடைந்தும் ஏது பயன்?



No comments: