Sunday, September 30, 2012

மழை

வானமுதம் அதிகமானால்
வயிறு காயும் ஏழைகள்

அடாது பெய்து
அன்றாடங் காய்ச்சிகளின்
அரைவயிற்றையும் காயவிடும்

நடைபாதை வாசிகள்
வானமே கூரையான
ஏழை எளிய விவசாயிகள்
பாடு, பெரும்பாடு.

உடலுழைக்கும் தொழிலாளர்கள்
உயிர் வாழ ,
ஆண்டைகளிடம்
அவர்களை அடகு வைக்கும்
அவல காலம்
மழைக்காலம்.

செல்வந்தர்களுக்கு
மழையில்
நனையப் பிடிக்கும்
ஏழைகளுக்கு
வயிற்றுக்குப் பிறகு தான்
அழகும் ரசனையும்.

உயிர் வாழவே
உத்திரவாதமில்லாத வேளையில்
உற்சாகத்தோடு
அடைமழையை
ஆராதிக்க முடியுமா?

காலத்தோடு
அளவாகப் பெய்யும் மழையை
ஞாலம் உள்ளவரை
கொண்டாடுவர் ஏழைகள்.










3 comments:

SETHUPANTHANAM said...

என்றாலும் மழையை
நேசிக்கும் மனிதர்கள்
இன்னமும்
குடிசையில்தான் வசிக்கிறார்கள்.
கொட்டும் வரைக்கும்
அல்லாடி
நின்றபிறகு தள்ளாடி
நிமிர்ந்துவிடுகிற
செடிகள், கொடிகள்
மரங்கள் அந்த
மனிதர்கள் இல்லையா தோழரே,
- சேதுபதி

பரிதியன்பன் said...

உண்மை தோழர்.ஆனாலும் எனக்கு அவர்களின் அவலமே முதலில் தெரிகிறது.நன்றி

Unknown said...

ஏழையின் அவலப் புலம்பல் அருமை...மழை நீராக...