Monday, December 14, 2009

சமபந்தி

பெரிய தேசமாய்
பேரெடுக்கவே
அட்டகாசம்

வளர்ச்சிக்குப் பதில்
வீக்கமே
பெருமைக் கொள்ளப்படுகிறது

கல்வி
சுகாதாரம்
வியாபாரம்.

ஆனாலும்
ஒரே நாடாய் இருக்க
அழுத்தங்கள்

மண்ணின் மைந்தருக்கு
மறுக்கப்படும்
உரிமைகள்

விழிப்புற்றுத்
தன்னுரிமைக் கோரினால்
தாங்காத சினம்

தெலுங்கானா உதயம்
தேசத்துக்கும் பெருமை
தெலுங்கருக்கும் நன்மை

தேசிய இனங்களின்
தன்னாட்சியே
மாசிலாத மக்களாட்சி

வீட்டுக் குழந்தைகள்
பட்டினியால் சாக
வீதியில் ஏனடா சமபந்தி?

3 comments:

Thenammai Lakshmanan said...

//வீட்டுக் குழந்தைகள்
பட்டினியால் சாக
வீதியில் ஏனடா சமபந்தி? //

அருமை பாலா அருமை

பரிதியன்பன் said...

நன்றி தேனம்மை

விஜய் said...

சமூக சாடல் கவிதை சாட்டைஅடி

வாழ்த்துக்கள்

விஜய்