Showing posts with label மரபு பாடல். Show all posts
Showing posts with label மரபு பாடல். Show all posts

Friday, April 24, 2009

ஈழம்

நாதியற்ற இனமாக ஆகிடுமோ
நாளையிந்த இழிநிலையும் மாறிடுமோ
ஆதிமக்கள் அடிமைநிலை நீண்டிடுமோ
ஆண்டயினம் அழிந்தொழிந்து போயிடுமோ
போதிமரப் புத்தமதம் புரிந்திடுமா
போர்முனையில் அமைதிவர நடந்திடுமா
நீதிநெறி நிலைபெற்று நின்றிடுமா
நிம்மதியாய் வாழ்ந்திடவே முடிந்திடுமா

கைகட்டி நிற்கிறதே உலகநாடு
கரைபட்டு போனதுவே மனிதநேயம்
மைவித்தை செய்கிறதே பாரதமும்
மனசாட்சி இழந்ததுவே இலங்கையுமே
தையென்று குதிக்கிறதே சிங்களமும்
தலைவெட்டி சாய்க்கிறதே தம்மக்கள்
வையகமே வானகமே வன்கொடுமை
வாய்திறந்து மௌனியாக இருப்பதேனோ?

எம்மக்கள் சிந்தியரத் தம்யாவும்
எருவாக இன்னொருநாள் உருவாகும்
தம்மக்கள் தலையெடுத்த தருக்கர்தம்
தலையெழுத்தை தண்டணையால் முடிப்பார்கள்
சும்மாவே சொரனையின்றி சோம்பலாக
சுற்றிவர மாட்டாரே எம்மிளைஞர்
பம்மாத்து காட்டுவோரை படைகொண்டு
பாடையிலே ஏற்றியே ஓய்வார்கள்