Wednesday, December 2, 2009

முண்டம்

அருணாச்சலத்தில்
அண்டை சீனாவின்
அத்துமீறல்.

வங்கதேச எல்லையில்
வழியற்ற மக்களின்
ஊடுறுவல்.

வடகிழக் கெங்கிலும்
வந்தேரிகளின்
அட்டகாசம்

பாகிஸ்தான் எல்லையில்
நிரந்தரமாய்
போர் மேகம்

வடக்கெல்லை முழுவதும்
வருத்தும் குளிரில்
அணிவகுப்பு.

கடற்பகுதி முழுவதும்
கட்டுப் பாடற்ற
சூரையாடல்.

ஆன்லைனில்
அதிபர் ஒபாமாவுடன்
அந்தரங்க உரையாடல்

முண்டங்களுக்கு
முழுநேரப் பணி
அரசியல்.

3 comments:

விஜய் said...

இந்த முண்டங்கள் திருந்தாதுகள்

இவைகளை முண்டங்கள் என்று சொல்வதை விட தலையற்ற உடல்கள் எனச்சொல்லலாம்

என்கருத்துகளை நான் உங்களில் காண்கிறேன்

வாழ்த்துக்கள்
விஜய்

பரிதியன்பன் said...

நன்றி விஜய்
ஒத்த சிந்தனை
தொடரட்டும் உம் தோழமை
பாலா

Thenammai Lakshmanan said...

arumai baalaa nallaa irukku