Monday, November 23, 2009

கொதிக்கும் பூமி

பசுமை இல்ல வாயுக்கள்
பல்கிப் பெருகிக் கூடுவதும்
பசுமைக் காட்டை அழித்தலும்
பல்வேதிக் கழிவுகள் பெருகுவதும்
மினசார ஆலைக் கழிவுகளும்
மிகுந்தே பூமி சூடாச்சு
எண்ணிப் பாருங்கள் உலகீரே
எத்தணை அழிவுகள் இதனாலே

ஆழி நீர்மட்டம் உயர்ந்திடும்
அலைசார் நகரங்கள் மூழ்கிடும்
வெள்ளிப் பனிமலை உருகிடும்
வெள்ளத்தால் அழிவுகள் பெருகிடும்
வறட்சியில் நிலங்கள் பிளந்திடும்
வறுமை ஒன்றே மிஞ்சிடும் -வல்
அரசும் மக்களும் உணர்ந்தாலே
அபாயம் பூமிக்கு அகன்றிடும்

கடலுக்குள்ளே மாநாடு
கவன ஈர்ப்புத் தீர்மானம்
பனிமலைகள் மேலே மாநாடு
மக்கள் விழிக்கக் கூப்பாடு
உலகை மிரட்டி அரசோச்சும்
உயரிய வசதிகள் அனுபவிக்கும்
வளர்ந்த நாடுகள் உணரட்டும்
வசதிகள் குறைத்து வாழட்டும்


2 comments:

விஜய் said...

தங்களது புவி சார் விழிப்புணர்வு கவிதையை பார்த்து வியந்தேன்

வாழ்த்துக்கள்

விஜய்

(சொல் சரிபார்ப்பு நீக்கி விடலாமே )

பரிதியன்பன் said...

நன்றி விஜய்
மேலும் படைக்க உங்கள் வாழ்த்து
ஊக்க சக்தி