Tuesday, April 7, 2009

தேர்தல்

ஐந்தாண்டுக்கு ஒருமுறை
அல்லது
இடையிலும் வரும்
நம்
அரசியல் வாதிகளின்
ஆசைக்கேற்ப

சனநாயகத்தின்
சாட்சியாய் நின்று
சந்தி சிரிக்கும் சர்க்கஸ்.

கொள்கைகளும் கோட்பாடுகளும்
கோவணாண்டிகளுக்கு மட்டுமே
குத்தகை.

பணநாயகத்தோடு
பந்தயத்தில்
நொண்டி மாடுகளாய்
சனநாயகவாதிகள்.

அலங்காரங்களுக்கும்
விளம்பரங்களுக்கும்
மத்தியில்
ஆட்பட்டு
செத்துமடியும் குடியரசு.

சாதியும் மதமும்
சரியாக அலசப்பட்டு
மக்களை மந்தைகளாகவே
பாதுகாக்க நடக்கும்
திருவிழா.

காய்ந்த தலையும்
கந்தை துணியும்
கை கூப்பித்
தொழப்படும் கனவுக் காலம்.

கருப்பு பணங்கள்
வெள்ளை மனங்களை
வெட்டிச் சாய்க்கும்
கருப்பு தினம்.

ஓடி ஓடி
உழைப்பவரை
உண்டு கொழுப்பவர்
வெண்று களித்திடும்
வெரிநாள்

கற்பனைகளையே
விற்பனை செய்யும்
கட்சிகளின் சந்தை

கவிதைக்கு
சொற்களைத் தேடினாலும்
போலிகளே முந்திவரும்
கலைக்களஞ்சியம்


No comments: