Thursday, October 25, 2007

மேலும் சில ஹைக்கூக்கள்

அடுக்கடுக்காய்ப் புத்தகம்
அழகழகாய் அட்டைப்படம்
படிக்காத அலமாரி

உயர்ந்து நிற்கும் கட்டிடம்
ஒழுகும் குடிசையில்
கொத்தனார்

தலையில் முக்காடு
தரையில் பூக்காடு
மார்கழி

ஹைக்கூ

வணக்கம்
என்னுடைய முதல் படைப்பை வெளியிடுகிறேன்.
இன்றுமுதல் இணைய வலைப்பதிவில் நானும்

அதிர்ச்சியில் ஆயா
அரைக்கீரை விற்கிறான்
அம்பானி